அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 05.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 05.11.2022

மேஷம்
அசுவினி : செலவுகளும் அலைச்சல்களும் அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை.
பரணி : உறவினர் வருகையால் நேற்றைய முயற்சி இன்று முடிவுக்கு வரும்.
கார்த்திகை 1 : பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பண வரவு உண்டாகும்.
ரோகிணி : பொருளாதார நிலை சீராகும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : உங்கள் முயற்சியில் கவனமுடன் செயல்படுங்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவாதிரை : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் செயல்களில் அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: தொழில் புரியும் இடத்தில் நிதானம் தேவை. பண விஷயத்தில் கவனம் அவசியம்.

கடகம்
புனர்பூசம் 4 : சிலரின் செயலால் உங்களுக்கு மனவுளைச்சல் ஏற்படும். அமைதி காப்பது நல்லது.
பூசம் : வம்பும் பிரச்னைகளும் இன்று உங்களைத் தேடிவரும். பொறுமை மிகவும் அவசியம்.
ஆயில்யம் : உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. மவுனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

சிம்மம்
மகம் : சந்திராஷ்டமம் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்கள்.
பூரம் : உங்கள் வளர்ச்சியை பார்த்து எதிரி ஆச்சரியப்படுவீர்கள்.
உத்திரம் 1 : பயன்படுத்தும் உங்கள் வாகனத்தை பழுதுபார்ப்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம் : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
சித்திரை 1, 2:உறவினர் ஒருவர் ஆதரவுடன் முயற்சி ஒன்றில் வெற்றி காணும் நாள்.

துலாம்
சித்திரை 3, 4 : உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் உங்கள் நேற்றைய முயற்சி ஒன்றில் வெற்றியைக் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : தைரியத்துடன் செயல்பட்டு உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலை குறித்த நல்ல தகவல் வரும்.
அனுஷம் : திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும்.
கேட்டை : பெற்றோரின் ஆதரவுடன் உங்கள் விருப்பம் நிறைவேறும். நற்பெயர் எடுக்கும் நாள்.

தனுசு
மூலம் : முயற்சி இழுபறியாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
பூராடம் : உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்வீர்.
உத்திராடம் 1 : உங்கள் செயலில் தடையை சந்திப்பீர். அரசுவழியில் சில நெருக்கடி ஏற்படும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : தைரியம் அதிகரிக்கும். நேற்றைய முயற்சியில் இன்று முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவோணம் : திட்டமிட்டு செயல்பட்டு லாபமடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1, 2 : உங்கள் எண்ணத்தை சகோதரர் மூலம் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : உறவினர் ஒருவருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
சதயம் : துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1, 2, 3 : பெற்றோரின் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.

மீனம்
பூரட்டாதி 4 : உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.
உத்திரட்டாதி : வேலைபார்க்கும் இடத்தில் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாக வரும்.
ரேவதி : உங்கள் முயற்சியில் தடை ஏற்பட்டு பின்னர் வெற்றி அடைவீர்கள்.