பிரித்தானிய ராஜகுடும்பத்தின் விதியை மீறிய இளவரசி கேட் மிடில்டன்!

Nila
3 years ago
பிரித்தானிய ராஜகுடும்பத்தின் விதியை மீறிய இளவரசி கேட் மிடில்டன்!

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதியாக அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்கும், பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் விதியை கேட் மிடில்டன் மீறியுள்ளார்.

ஸ்கார்பரோ பகுதியிலேயே இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்துள்ளது.அத்துடன், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர், மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார்.

நபரொருவர் தடையைத் தாண்டி வேல்ஸ் இளவரசியை நெருங்கியுள்ளதுடன் புகைப்படத்தின் போது கேட் மிடில்டனின் தோள் மீது கையை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். பதிலுக்கு கேட் மிடில்டனும் தமது கையை அவர் தோள் மீது வைத்துள்ளார்.

இதுபோன்ற செயல்களுக்கு ராஜகுடும்பத்திற்கு என உத்தியோகப்பூர்வ விதிகள் ஏதும் இல்லை என்றாலும், ராஜகுடும்பத்து உறுப்பினர்களை சந்திக்கும் மக்கள் கை குலுக்குவதுடன் முடித்துக்கொள்ள வேண்டும், ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எவரும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கூடாது என எழுதப்படாத விதிகள் கடைபிடிக்கப்படுகின்றது.

இருப்பினும் தற்போதைய வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டனே முன்னர் பலமுறை இந்த விதிகளை மீறியுள்ளதாகவும், ராணியார் காலமான பின்னர், செப்டம்பர் 8ம் திகதி ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் பெரும்பாலான நேரம் பொதுமக்களை சந்திக்கவே செலவிட்டனர் எனவும் கூறப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4