நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ள கிரிக்கட் வீரர் தோனி
இந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் மீது இந்திய கிரிக்கட் வீரர் மஹேந்திரசிங் தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய காவல்துறை அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
விவாத நிகழ்ச்சியில் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தோனி 2014 ம் ஆண்டு மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
எனினும் இந்த வழக்குக்கு எதிராக குறித்த காவல்துறைஅதிகாரியான சம்பத் குமார் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் குறித்த பதில் மனுவில் மேல் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிக்கும் வகையில், அதிகாரி கருத்துக்களை தெரிவித்திருந்தார் என்று கூறி பிரிதொரு மனுவை தோனி தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகையில் காவல்துறை அதிகாரியின் பதில் மனு அமைந்திருப்பதால் அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும் என்று தோனி கோரியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை மேல்நீதிமன்றில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.