அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 06.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 06.11.2022

மேஷம்
அசுவினி : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். செயல்களில் கவனம் தேவை.
பரணி : உங்கள் முயற்சியில் இழுபறி ஏற்பட்டாலும் போராடி முடிப்பீர்கள். எச்சரிக்கை அவசியம்.
கார்த்திகை 1: நேற்றைய செயல் முடிவிற்கு வரும். நண்பர்களுக்காக செலவு செய்வீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : பண வரவு திருப்தியாக இருக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.
ரோகிணி : இழுபறியாக இருந்து வந்த செயல் நிறைவேறும். நினைத்தது நடந்தே தீரும்.
மிருகசீரிடம் 1, 2 : உங்கள் திறமை வெளிப்படும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும்.
திருவாதிரை : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் போட்டியாளர் விலகுவார்.
புனர்பூசம் 1, 2, 3 : வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3 : தந்தைவழி உறவினர் ஒருவரால் உதவி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
பூசம் : செயலில் வெற்றிபெற தனித்திறமை வெளிப்படுத்துவீர்கள்.
ஆயில்யம் : தடைகளை தகர்ப்பீர்கள். உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்பு விலகும்.

சிம்மம்
மகம் : எதிரிகளால் சங்கடத்தை சந்திப்பீர்கள். செயல்களில் இருந்த நெருக்கடி அகலும்.
பூரம் : மனதில் இருந்து வந்த பயம் வந்து போகும். விழிப்புணர்வு ஏற்படும் நாள் .
உத்திரம் 1 : வழக்கமான உங்கள் செயல்களில் மாற்றம் உண்டாகும். நிம்மதியான நாள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : புதிய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். நண்பர்களால் நன்மை உண்டு.
அஸ்தம் : உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி பலிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4 : தொழிலில் போட்டியாளர்களால் உண்டான நெருக்கடி விலகும். தைரியம் அதிகரிக்கும்.
சுவாதி : நேற்று நிறைவேறாமல் இருந்து வந்த செயலில் இன்று முன்னேற்றம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி பெற உறவினர் ஒருவர் உதவியாக இருப்பார்.

விருச்சிகம்
விசாகம் 4 : உங்களுடன் நெருக்கமாக இருந்தவர் ஒருவரால் சில சங்கடத்தை சந்திக்க நேரும்.
அனுஷம் : நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் நாள். நிதானம் தேவை.
கேட்டை : பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும்.

தனுசு
மூலம் : தேவையற்ற பயம் வந்து போகும். குடும்பத்தில் ஒருவருக்குரிய பணத்தேவை பூர்த்தியாகும்.
பூராடம் : உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்களின் ஆதரவு நன்மை தரும்.
உத்திராடம் 1: அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
திருவோணம் : செயலில் இருந்து வந்த தடை விலகும். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 : முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். விஐபிகளின் சந்திப்பால் உங்கள் எண்ணம் ஈடேறும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : அவசரப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
சதயம் : உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் ஏற்படும். நிதானம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3 : செயல், வார்த்தைகளில் கவனம் தேவை. மவுனம் அவசியம்

மீனம்
பூரட்டாதி 4 : மனம் அலைபாயும். முக்கியமான செயலில் முடிவிற்கு வர முடியாமல் போகும்.
உத்திரட்டாதி : பணி புரியும் இடத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பொறுப்புகளில் கூடும்.
ரேவதி : வியாபாரம், தொழில் யாவும் மந்தமாகி பின்னர் சரியாகும். விழிப்புணர்வு தேவை.