ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!

Nila
3 years ago
ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தனுஷ்க குணதிலக்க இல்லாமல் மீண்டும் சிட்னியில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை இலங்கைக்கு திரும்பியுள்ளது யுவதியொருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

T20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் காயம் அடைந்த தனுஷ்க குணதிலக்க முழுப் போட்டியிலிருந்தும் நீக்கப்பட்டார், ஆனால் அதிகாரிகள் அவரை நாட்டிற்கு அனுப்பவில்லை தனுஷ்க குணதிலக்க இதற்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோருடன் இரவு ஹோட்டலை விட்டு வெளியேறி சாலையில் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட சம்பவம் மிகவும் பிரபலமானதென்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4