லிட்ரோ, லாஃப் எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Nila
2 years ago
லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வெளியிடுவதாக இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே எரிவாயு தட்டுப்பாடின்றி வெளியிடப்படும் எனவும், ஏதேனும் ஒரு பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் நிறுவனத்திற்கு தெரிவிக்குமாறும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும், லாஃப் எரிவாயுவையும் தட்டுப்பாடின்றி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு வகையான எரிவாயுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.