ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

Mayoorikka
2 years ago
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசர் அல்-அமீரி நேற்று (08) பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்.

பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

அந்நாட்டின் தேசிய பேரவைக்கு (National Council) பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும்முறை தொடர்பில் விளக்கமளித்த தூதுவர், இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினார். அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்களைப் வலுப்படுத்துவது தொடர்பிலும், குறிப்பாக வர்த்தகத்துறையில் பெண்களை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்யப் புதுப்பிக்கத்தக்க சக்தியை எவ்வாறு
பயன்படுத்தலாம் என்பதும் குறித்தும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!