தனுஷ்கவை பார்வையிட சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பார்வையிடச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்
தனுஷ்கவின் நலன் தொடர்பில் விசாரிப்பதற்காக உயர்ஸ்தானிகரை சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் டொக்டர் அமல் ஹஸார் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய உயர்ஸ்தானிகர் தனுஷ்கவை பார்வையிட அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை சிறைச்சாலைகளை விடவும் அவுஸ்திரேலிய சிறைச்சாலைகள் மிகவும் நல்ல நிலையில் காணப்படுவதனால், தனுஷ்கவிற்கு கடுமையான அசௌகரியங்கள் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனுஷ்கவை நலன் விசாரித்து அவருக்கு தேவையான உதவிகளை வழங்கும் நோக்கில் உயர்ஸ்தானிகர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ஹஸார் தெற்கு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.