காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து பாராளுமன்றில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

Mayoorikka
3 years ago
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து பாராளுமன்றில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4