கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதி பலி

Kanimoli
3 years ago
 கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதி பலி

கைதி ஒருவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இவர் கடந்த 10 ஆம் திகதி காணாமல் போன நிலையில் இவரை பொலிஸாரும் இராணுவத்தினரும் மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு 31 வயதுடைய இவர் பல நாட்களாக உணவு அருந்தாமல் இருந்த நிலையில் இவரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்று உயிரிழந்துள்ளார்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் புனர்வாழ்விற்காக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு இவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த 7ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஏற்பட்ட குழப்பத்தின் போது கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4