டுவிட்டரில் Blue tick அடையாளத்தை செயற்படுத்திக்கொள்ளும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Kanimoli
2 years ago
டுவிட்டரில் Blue tick அடையாளத்தை செயற்படுத்திக்கொள்ளும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

டுவிட்டரில் மாதாந்தம் பணம் செலுத்தி Blue tick அடையாளத்தை செயற்படுத்திக்கொள்ளும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

டுவிட்டரில் 'புளூ டிக்' (Blue tick) பயன்படுத்துவதற்கு மாதம் 8 டொலர் கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் Blue tickஐ பயன்படுத்துகின்றனர்.

டுவிட்டர் கணக்கு குறித்த நபரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்தி கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற Blue tick குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

எனினும், கட்டணம் செலுத்தியவர்களில் பலர் போலியான டுவிட்டர் கணக்குகளை வைத்திருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

போலியான தரப்பினரின் அடையாளங்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் கட்டண அடிப்படையிலான Blue tick செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!