வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவ பேருந்து மோதி விபத்து

Kanimoli
3 years ago
வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவ பேருந்து மோதி விபத்து

வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவ பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (12) இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரிலிருந்து புகையிரத வீதியூடாக மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த போது அதே பாதையில் பயணித்த இராணுவத்தினரின் பேருந்து குறித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து காவல்துறை பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4