நாடெங்கிலும் உள்ள பெருந்தோட்டத்துறையை "நலிவுற்ற" பிரிவாக அறிவிக்க வேண்டும் - மனோகணேசன்

Kanimoli
3 years ago
நாடெங்கிலும் உள்ள  பெருந்தோட்டத்துறையை "நலிவுற்ற" பிரிவாக அறிவிக்க வேண்டும் - மனோகணேசன்

நாடெங்கிலும் உள்ள  பெருந்தோட்டத்துறையை "நலிவுற்ற" பிரிவாக அறிவிக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை குடியிருப்புகளை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதத்தை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கி உதவுங்கள் என இந்தியப் பிரதமர் நிரந்தர மோடியிடமும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினிச் சாவு ஏற்பட இனியும் தாமதிக்காமல் இந்த நடவடிக்கையை அவசர நிலையாக கருத வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் அறிக்கைக்கு அமைவாக இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 வீதமாக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டத்துறையின் வறுமை நிலையானது 53 வீதமாக உயர்வடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4