எகிப்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழப்பு

#Accident #Death
Prasu
3 years ago
எகிப்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழப்பு

எகிப்து நாட்டின் தஹ்லியா மாகாணத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4