அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.11.2022

மேஷம்
அசுவினி: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.
பரணி: நெருக்கடிகளுக்கு முடிவு கட்டுவீர்கள். எதிர்பார்த்த வரவுகள் மகிழ்ச்சி தரும்.
கார்த்திகை 1: நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். ரகசியங்களை பிறரிடம் தெரிவிக்க வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றும். உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
ரோகிணி: உங்கள் தன்மானத்தை சீண்டும் வகையில் சிலர் செயல்படலாம். அமைதி காப்பது நல்லது.
மிருகசீரிடம் 1, 2: பேச்சில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி தராதீர். நிதானம் தேவை

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: செயல்களில் குழப்பம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
திருவாதிரை: செயலை நிறைவேற்றுவதற்கு விடாமுயற்சி தேவை. எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: விரும்பியதை அடையும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எண்ணம் நிறைவேறும். மனக்குழப்பம் தீரும்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: புதிய முயற்சிகளில் கவனம் செல்லும். எதிர்பாராத செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
பூசம்: எண்ணம் நிறைவேறும். ஆடம்பர செலவால் பணம் கரையும். யோசித்து செயல்படவும்.
ஆயில்யம்: அறிவாற்றல் வெளிப்படும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்
மகம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வசூலாகும். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பூரம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய நட்புகளால் உங்கள் தேவைகள் நிறைவேறும்.
உத்திரம் 1: விலகிச் சென்ற உறவினர் தேடி வருவர். உங்கள் பேச்சுக்கு மதிப்பு ஏற்படும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: வியாபாரிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய முயற்சியில் லாபம் வரும்.
அஸ்தம்: வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும் எதிர்பார்த்த வருமானம் உண்டு

துலாம்
சித்திரை 3, 4: எதிர்பார்த்த நன்மை கிடைக்காமல் போகும். முயற்சி இழுபறியாகும்.
சுவாதி: நண்பருக்கு உதவப்போய் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். புதிய நட்புகளிடம் எச்சரிக்கை தேவை.
விசாகம் 1, 2, 3: அறிமுகம் இல்லாதவருடன் நெருக்கம் வேண்டாம். வீண் சங்கடங்கள் உண்டாகும்.

விருச்சிகம்
விசாகம் 4: மனதை சங்கடப்படுத்தும் வகையில் சில விஷயம் நடக்கும். அமைதி காப்பது நல்லது.
அனுஷம்: நட்புகளிடமும் மோதல் உண்டாகும். பிறர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கேட்டை: நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது.

தனுசு
மூலம்: நண்பர்களால் நன்மை காண்பீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
பூராடம்: குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பப்படி செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1: எதிர்பார்த்ததை அடைவீர்கள். நீண்ட நாளுக்குப்பின் மனதில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: உற்சாகமுடன் செயல்படுவீர்கள். செல்வாக்கு கூடும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவோணம்: எதிரிகள் சரணடைவார்கள். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சியில் வெற்றி உண்டாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: பிள்ளைகள் வழியே செலவு வரலாம். செயல்களில் தடை, தாமதம் ஏற்படும்.
சதயம்: குடும்பத்தினரால் சங்கடத்திற்கு ஆளாகலாம். வீண் குழப்பம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்தவற்றில் நன்மை கிடைக்காது. வீண்சங்கடத்திற்கு ஆளாகலாம்

மீனம்
பூரட்டாதி 4: பணிஇடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பர்.
உத்திரட்டாதி: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மற்றவர் உங்களைக் குறை சொல்வர்.
ரேவதி: பணி நெருக்கடியின் காரணமாக டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.