விமல் வீரவன்ச நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றம்

Kanimoli
3 years ago
 விமல் வீரவன்ச நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றம்

கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

குறித்த கூட்டம் முடிவடைந்து விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவினர் மண்டபத்தை விட்டு வெளியேறிய போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டு அவர்களை திட்டியதால், இரு குழுக்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் விமல் வீரவன்ச தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தை விட்டு வாகனத்தில் வெளியேறினார். இருப்பினும் கடும் எதிர்ப்பு காரணமாக வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் வெளியே வரமுடியாமல் மண்டபத்திற்குள் இருந்தனர்.

பின்னர் வாசுதேவ மற்றும் திஸ்ஸ விதாரணவும் எதிர்ப்புக்கு மத்தியில் தமது வாகனங்களில் ஏறிச் சென்ற வேளையில் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான நிலைமை தொடர்ந்தது. சுமார் 15 நிமிடங்களுக்கு இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான நிலைமை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4