அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 16.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 16.11.2022

மேஷம்
அசுவினி: புதிய முயற்சி இன்று வேண்டாம். தாய்வழி உறவுகளின் உதவி உண்டாகும். வரவு அதிகரிக்கும்.
பரணி: மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். முயற்சி ஆதாயம் தரும். நிதிநிலை உயரும்.
கார்த்திகை 1: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள்.
ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வீடு, மனை வாங்கும் சிந்தனை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: தடைகளைக் கடந்து செயல்படுவீர்கள். பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்வீர்கள்.
திருவாதிரை: சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். நீண்ட நாள் எண்ணம் பூர்த்தியாகும்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு நன்மை தரும்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பூசம்: தேவையற்ற சிந்தனை உண்டாகும். தந்தை வழி உறவினரால் நன்மை கிடைக்கும்.
ஆயில்யம்: எதிரி தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள்.

சிம்மம்
மகம்: வீண்செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் நிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவர்.
பூரம்: வரவு அதிகரித்தாலும் செலவு கையை மீறிச்செல்லும். செயலில் நிதானம் தேவை.
உத்திரம் 1: வாகன வகையில் செலவு ஏற்படும். பயணத்தில் கவனமுடன் செயல்படுங்கள்

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பார்ப்பு நிறைவேறும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.
அஸ்தம்: வரவேண்டிய பணம் வந்து சேரும். நெருக்கடி விலகும். இனிய சம்பவத்தால் மகிழ்வீர்கள்.
சித்திரை 1, 2: கூட்டுத் தொழிலை விரிவு செய்வீர்கள். நண்பர்கள் உங்கள் கருத்துடன் ஒத்துப்போவர்.

துலாம்
சித்திரை 3, 4: நண்பர்கள் உதவுவர். ஆனாலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
சுவாதி: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாலினத்தால் நன்மை காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: போட்டியை சமாளிக்க வியாபாரத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். திறமை வெளிப்படும்.

விருச்சிகம்
விசாகம் 4: அறிவாற்றல் வெளிப்படும். எதிர்பார்த்த வருமானம் வரும். நன்மையான நாள்.
அனுஷம்: தந்தைவழி உறவுகளால் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகளின் வளர்ச்சிக்காக பாடுபடுவீர்கள்.
கேட்டை: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சுயதொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும்.

தனுசு
மூலம்: நினைப்பதற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். எதிரியின் கை மேலோங்கும்.
பூராடம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும்.
உத்திராடம் 1: புதிய முயற்சி நிறைவேறாமல் போகும். பொருளாதார நெருக்கடியால் சிரமம் உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: மனதில் புதிய சிந்தனை உருவாகும். நண்பரின் ஆதரவால் நினைத்ததை அடைவீர்கள்.
திருவோணம்: குழப்பம் விலகும். உங்களுக்கு எதிரானவர்களை அடையாளம் காண்பீர்கள். செலவிற்கேற்ப வரவு வரும்.
அவிட்டம் 1, 2: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: செயலில் வெற்றி காண்பீர்கள். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும்.
சதயம்: வாழ்க்கைத் துணையின் வழியே எண்ணம் நிறைவேறும். எதிரிகளின் செயலை முறியடிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சிகள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர்

மீனம்
பூரட்டாதி 4: அவசர வேலையால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
உத்திரட்டாதி: மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். வேலைப்பளுவால் உடலும் மனமும் சோர்வடையும்.
ரேவதி: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினரால் நெருக்கடி உண்டாகும்.