சோளத்தோட்டத்திற்கு நடுவில் இரண்டு ஏக்கர் கஞ்சா தோட்டம்: இருவர் கைது

Prathees
3 years ago
சோளத்தோட்டத்திற்கு நடுவில் இரண்டு ஏக்கர் கஞ்சா தோட்டம்: இருவர் கைது

15 ஏக்கர் சோளத்தோட்டத்திற்கு நடுவில் இரண்டு ஏக்கர் கஞ்சா தோட்டத்தை நடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டதாக வளன மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்பிலிப்பிட்டிய தோரகொலயா பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார அவர்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் குழு பல நாட்கள் கண்காணிப்புப் பணியின் பின்னர் தனமல்வில நிகவெவ பிரதேசத்திலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தெமோதர வனப்பகுதியில் சுற்றிவளைத்தது.

6, 7 மற்றும் 8 அடி உயரத்தில் நன்கு வளர்ந்த சுமார் 10,400 மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், இரண்டு சந்தேக நபர்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாகவும் சோதனையில் இணைந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தனமல்வில பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4