2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - விமல் வீரவன்ச

Kanimoli
2 years ago
  2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - விமல் வீரவன்ச

 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நேற்று முன்தினம் சபையில் முன்வைத்து உரையாற்றினார்.

இந்நிலையில் பாதீடு குறித்தும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடுவதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’ அரசியல் கூட்டணி நேற்று முன்தினம் இரவு கூடியது.

இதன்போது ஜனாதிபதி முன்வைத்த பாதீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் இல்லை என்பதாலும், மேலும் சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டும் பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி நாட்டு வளங்களை விற்பதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார். இந்த பாதீட்டை தோற்கடிப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அதேவேளை, பாதீட்டை தோற்கடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!