அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 17.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 17.11.2022

மேஷம்
அசுவினி: முயற்சியில் கவனம் தேவை. பிறரிடம் எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
பரணி: செயலில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறியான நிலை ஏற்படும்.
கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு நன்மை காண்பீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. சிலர் அதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.
ரோகிணி: செயல்களில் நிதானம் தேவை. அரசு வழியிலான முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மை இருக்காது.
மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். பொன் பொருள் வாங்குவீர்கள்.
திருவாதிரை: முயற்சி நிறைவேறும். புதிய வேலை எதிர்பார்த்தவர்களுக்கு அழைப்பு வரும்.
புனர்பூசம் 1, 2, 3: வெளியூர் செல்ல நேரிடும். ஈடுபட்ட செயலில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: பண விஷயத்தில் கவனம் தேவை. முயற்சி நிறைவேற கடின உழைப்பு தேவை.
பூசம்: முயற்சியில் தீவிரம் காட்டுவீர்கள். அலைச்சல் வழியே நினைத்ததை சாதிப்பீர்கள்.
ஆயில்யம்: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்
மகம்: முயற்சி நிறைவேறும். விஐபிகளின் ஆதரவால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரம்: பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மனதில் குழப்பம் உண்டாகும்.
உத்திரம் 1: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிரி விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பாராத செலவு உண்டாகலாம். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும்.
அஸ்தம்: குடும்பத்தினரால் பிரச்னையை சந்திப்பீர்கள். வீண் சங்கடங்கள் ஏற்படும்.
சித்திரை 1, 2: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். திட்டமிட்ட வேலை முடியும்.
சுவாதி: புதிய சிந்தனை உண்டாகும். எதிர்காலத்திற்குரிய வழியை தேர்வு செய்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: புத்திசாலித்தனம் வெளிப்படும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். திடீர் வரவு உண்டாகும்.

விருச்சிகம்
விசாகம் 4: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
அனுஷம்: தொழிலை மாற்றியமைக்கவோ, விரிவு செய்யவோ முயற்சிப்பீர்கள். லாபம் உண்டாகும்.
கேட்டை: வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

தனுசு
மூலம்: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். முயற்சி இன்று நிறைவேறும்.
பூராடம்: உங்கள் அறிவாற்றலால் பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.
உத்திராடம் 1: பழைய பிரச்னை ஒன்று தீரும். உறவினர்களின் ஆதரவு உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்தவற்றில் தடை, தாமதம் உண்டாகும். மனதில் வீண் குழப்பம் ஏற்படும்.
திருவோணம்: முயற்சிகளில் சிரமங்களைக் காண்பீர்கள். எதிரியால் பிரச்னைகளை சந்திப்பீர்கள்.
அவிட்டம் 1, 2: யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சியில் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாமல் போகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: இனிய சம்பவங்களால் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஒன்றை அடைவீர்கள்.
சதயம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பண வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 1, 2, 3: உங்கள் முயற்சி நண்பரின் ஒத்துழைப்புடன் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.

மீனம்
பூரட்டாதி 4: செயல்களில் விவேகம் இருக்கும். உங்களுக்குண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: சுறுசுறுப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிரியால் உண்டான தொல்லை விலகும்.
ரேவதி: தைரியத்துடன் செயல்படுவீர்கள். எதிரிகள் விலகிச் செல்வர். விருப்பம் ஒன்று நிறைவேறும்.