அனுராதபுரத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற பொலிஸாரை தாக்கிய 6 பெண்கள் கைது

Kanimoli
3 years ago
அனுராதபுரத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற பொலிஸாரை தாக்கிய 6 பெண்கள் கைது

அனுராதபுரத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற பொலிஸாரை தாக்கிய 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று புபுதுபுர பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 14 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸாரிடம் அழைத்துச் செல்ல தயாரான போது, ​​அவ்விடத்திற்கு வந்த சந்தேகநபர்களின் உறவினர்கள் 6 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கற்களால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதமான ஒன்றுக்கூடியமை மற்றும் கற்களால் தாக்கி காயங்களை ஏற்படுத்திய குற்றங்களுக்காக குறித்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4