12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Kanimoli
3 years ago
12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மன்னாரைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் பின் சந்தேக நபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4