ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை இலங்கைக்கான வாராந்திர விமான சேவையை தொடங்க முடிவு

Kanimoli
3 years ago
ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை இலங்கைக்கான வாராந்திர விமான சேவையை தொடங்க முடிவு

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான சார்ட்டர் ஏர்லைன் "அஸூர் ஏர்" நாளை (03) முதல் இலங்கைக்கான வாராந்திர விமான சேவையை தொடங்கவுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல், நவம்பர் 04 ஆம் திகதி முதல் இலங்கைக்கான விமான சேவைகளை பிரான்ஸ் கொடி ஏற்றிச் செல்லும் ஏர் பிரான்ஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுவிஸ் தேசிய விமான சேவையும் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இலங்கையில் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 இவ்வாறு விமான சேவை நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை தொடங்குவதால் இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர் என சுற்றுலா துறை அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4