பாசிக்குடாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது

Kanimoli
3 years ago
பாசிக்குடாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கல்குடா பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ள சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் 33, 36 வயதுடைய இருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 38 வயதுடைய ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவராவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 22 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4