ஹப்புத்தளை, கஹகொல்ல - கோனமொடவ வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

Reha
3 years ago
ஹப்புத்தளை, கஹகொல்ல - கோனமொடவ வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

ஹப்புத்தளை, கஹகொல்ல - கோனமொடவ வீதியில் உயர் அழுத்த மின்கம்பத்திற்கு அருகில் சடலமொன்று நேற்று (18) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஹப்புத்தளை காவல்துறை உத்தியோகத்தர்கள் சடலத்தை கண்டெடுத்துள்ளதுடன், மின்சாரம் தாக்கியதில் சடலத்தில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கஹகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 63 அகவை மதிக்கத்தக்க ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் சில காலங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4