பேருந்து பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்த முடிவு

Kanimoli
3 years ago
பேருந்து பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்த முடிவு

பேருந்து பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பயணிகள் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் வகையில் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்கப்படும் என்பதால் அவற்றின் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என்றும் பயணிகள்  உள்ளே வரும் இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய சாதனங்களில் தங்களது வங்கி அட்டைகளை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இடங்களை அறிய, பேருந்துகளில் ஜிபிஎஸ் அமைப்பை அணுகும் திறன் கொண்ட புதிய மின்னணு சாதனங்களை பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பேருந்து உரிமையாளரின் அனுமதியுடன், சாரதிக்கு உதவியாக ஒரு உதவியாளரை பணியமர்த்த முடியும் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சாதனங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு, இலங்கை மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

புதிய கொடுப்பனவு முறைமை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4