நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

Kanimoli
3 years ago
நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் அருகிலுள்ள நீர்த்தேக்கத்திற்கு நீராட சென்றுள்ளார்.

இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் அதனை அவதானித்த நண்பர்கள் சத்தமிட்டு அருகிலுள்ள இராணுவத்தினர் யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குறித்த யுவதிஉயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4