தாண்டியடிக் கிராமத்தில் மறைந்த தமிழ் உறவுகளின் நினைவாக சிரமதானப் பணி ஆரம்பம்

Kanimoli
2 years ago
 தாண்டியடிக் கிராமத்தில் மறைந்த தமிழ் உறவுகளின் நினைவாக சிரமதானப் பணி ஆரம்பம்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட தாண்டியடிக் கிராமத்தில் மறைந்த தமிழ் உறவுகளின் நினைவாக சிரமதானப் பணி இன்று நடைபெற்றுள்ளது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஶ்ரீநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், மண்முனை மேற்கு வட்டாரக்கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் எனப் பலர் பங்குபற்றியுள்ளனர்.

இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலையப் பதில் அதிகாரி அவ்விடத்தில் சில தடங்கல்களைச் செய்ய முற்பட்டதுடன் எதிரான கருத்துகளையும் முன்வைத்துள்ளார்.

அவற்றுக்குப் பதில் அளித்த பின்னர், தடைகளைக் கடந்து சிரமதானப் பணி சிறப்பாக நடந்தேறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!