முட்டை வியாபாரிகள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Prabha Praneetha
3 years ago
முட்டை வியாபாரிகள் எடுத்துள்ள அதிரடி  தீர்மானம்

முட்டை விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருவதால் தற்போது முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சில கடைகளில் முட்டை விலை, 55 ரூபாய் முதல் 57 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதுடன் இன்னும் சில கடைகளில் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

முட்டையின் மொத்த விற்பனை விலை 52 ரூபாய் முதல் 54 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

எனவே இந்த நிபந்தனைகளால் கட்டுப்பாட்டு விலையில் முட்டை வழங்க முடியாததால், முட்டை விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4