நைட் கிளப்பில் இறந்தவர்களை நினைவு கூர்ந்த வேளை துப்பாக்கிச்சூடு: ஐந்து பேர் உயிரிழப்பு

Mayoorikka
3 years ago
நைட் கிளப்பில் இறந்தவர்களை நினைவு கூர்ந்த வேளை துப்பாக்கிச்சூடு: ஐந்து பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில் உள்ள கொலோராடா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் நைட் கிளப் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

டிரான்ஸ்போபியா என்று சொல்லப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 20-ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில்  நைட் கிளப்பிற்குள் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகவும் 18 பேர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4