எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமையை ( QR) நீக்குவதற்கு எந்தத் தீர்மானமும் தற்போது எடுக்கப்படவில்லை - கஞ்சன விஜேசேகர

Kanimoli
3 years ago
எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமையை ( QR) நீக்குவதற்கு எந்தத் தீர்மானமும் தற்போது எடுக்கப்படவில்லை - கஞ்சன விஜேசேகர

எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமையை ( QR) நீக்குவதற்கு எந்தத் தீர்மானமும் தற்போது எடுக்கப்படவில்லையென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமை அடுத்த மாதம் முதல் நீக்கப்படவுள்ளதாக, சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அவ்வாறான எந்த தீர்மானத்தையும் தற்போது எடுக்கவில்லை.
எரிபொருள் தேவையை முழுமையாக பூர்த்திசெய்யக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில், ஒதுக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் அனுமதிப் பத்திர முறைமை நீக்கப்படமாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4