கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணம் செலுத்தாமல் தப்பி சென்ற பசில்!

Nila
3 years ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணம் செலுத்தாமல் தப்பி சென்ற பசில்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான வருகை ஓய்வறை (VIP arrival lounge) சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தை செலுத்தாமல் சென்றுள்ளார்.

மேலும் அங்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை விமான நிலைய தரப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பசில் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தில் விசேட பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.

அங்கு அவரை வரவேற்க வந்தவர்களில் பெரும்பாலானோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சுதந்திர சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உணவு பரிமாறல் சேவை அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தினர்.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் கோல்ட் ரூட் (Gold Route) பகுதி ஊடாக வந்திருந்தார். இந்த விசேட பிரமுகர் சேவையைப் பயன்படுத்துவதற்கு ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவாகும்.

இன்றுவரை பணம் செலுத்தாமல் பெசில் ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் விசேட பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்தியதை விமான நிலையத்தின் உள்ளக தகவல் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த இந்த ஜூன் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பெசில் ராஜபக்ஷ, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4