சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்துக்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் - மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற வகையில், சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்துக்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், நடப்பு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு காரணம் என்று கூறி, ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி குற்றம் சுமத்துகின்றனர். எனினும் உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் குறுகிய காலத்தில் அதிக கடன்கள் பெறப்பட்டன.
எனினும் அதனைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அத்துடன் அதற்கான பொறுப்பை ஏற்று நாட்டை முன்னெடுத்துச் செல்லவும் அந்த தரப்பினர் தயாரில்லை.
அவர்கள் வீரர்கள் போன்று செயற்படுகிறார்கள். எனினும் தாம் அவ்வாறு செயற்பட்டு மக்களை விட்டு செல்லவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கமுடியாது.
எனினும் மக்களின் பிரச்சினைகளை குறைக்க முடியும்.
இதனை விடுத்து அவர்களின் பிரச்சினைகளை, கவலையை, அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது, அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் அதனை விற்பனை செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பது பொதுஜன பெரமுனவின் கொள்கையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாட்டின் பாதுகாப்பு அவசியம் என்பதன் காரணமாகவே, பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



