2004 ஆண்டுக்கு பின்னரே இலங்கையில் பொருளாதார பின்னடைவு ஆரம்பமானது- ஐக்கிய மக்கள் சக்தி

Kanimoli
1 year ago
2004 ஆண்டுக்கு பின்னரே இலங்கையில் பொருளாதார பின்னடைவு ஆரம்பமானது- ஐக்கிய மக்கள் சக்தி

2004 ஆண்டுக்கு பின்னரே இலங்கையில் பொருளாதார பின்னடைவு ஆரம்பமானது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே 2004 ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தை கொலை செய்தவர்களாக மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ, பீ.பி. ஜயசுந்தர மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை குறிப்பிடமுடியும் என்று கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் விமான நிலையத்தில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான பெசில் ராஜபக்ஷவுக்கு மாலையணிவித்து வரவேற்ற சம்பவமாகும்.

பொருளாதார வீழ்ச்சிக்காக தூக்கிலிடப்பட வேண்டிய கொலையாளிக்கு அலுகோசு மலர் மாலையணிவித்து வணங்கிய ஒரு காட்சியையே காணமுடிந்தது என்று கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

முன்னதாக 2002- 2003 ஆண்டுக் காலப்பகுதியில், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம், அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நிலைப்பாட்டை வெளியிட்டது.

எனினும் மஹிந்த ராஜபக்ச, ஜேவிபி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய தரப்பினர் இணைந்து அதனை எதிர்த்தனர்.

இதனையடுத்து 2004- 2014 ஆண்டுக்காலத்தில் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை 3,50,000ஆல் அதிகரிக்கப்பட்டது. இதனால் அரச செலவீனம் கோடிக்கணக்கில் அதிகரித்தது.

அதேநேரம் 2014 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 107 ஆக இருந்த அரச நிறுவனங்கள் மற்றும் முயற்சிகள் 245ஆக அதிகரிக்கப்பட்டன.

இதன் காரணமாக இலங்கைக்கு 1.2 ரில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டது. இந்தநிலையில் 2003ஆம் ஆண்டு அரச நிறுவனங்களை மறுசீரமைப்புக்கு உட்படுத்தியிருந்தால், இந்த நட்டம் ஏற்பட்டிருக்காது.

எனினும் தற்போதைய நிலையில் அரசாங்கம் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை அவசரமாக முன்னெடுக்கிறது.

இது சீனி நோயாளி ஒருவருக்கு மீண்டும் அதிக சீனி வழங்கி அவரை குணப்படுத்தமுடியாத நிலைக்கு கொண்டு வந்த பின்னர் தற்போது அந்த நோயாளியின் கை மற்றும் கால் போன்ற அவையவங்களை வெட்டியெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அரசாங்கம் அவசரமாக அதிக வரிகளை விதிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தாங்கமுடியாத சுமைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!