தரமற்ற பூச்சி கொல்லிகள் மற்றும் களை கொல்லிகளை விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை சோதனை செய்ய நடவடிக்கை!

Mayoorikka
1 year ago
தரமற்ற பூச்சி கொல்லிகள் மற்றும் களை கொல்லிகளை விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை சோதனை செய்ய நடவடிக்கை!

தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை சோதனை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில், இலங்கைக்கு விவசாய இரசாயனப் பொருட்களை விநியோகிக்கும் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு தரக்குறைவான பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை அதிக விலைக்கு விற்று விவசாயிகளின் பணத்தை சிலர் திருடுவதாக விவசாய இரசாயன இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவற்றைப் பயன்படுத்துவதால் களை கட்டுப்பாடு அல்லது பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இரசாயனப் பொருட்களால் பல சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காசி கெமிக்கல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை பயிர்களுக்கு பயன்படுத்தும்போது பரவியதால் 54 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!