திரிகோணமடு வனப்பகுதியை அழிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை! அமைச்சர் மஹிந்த அமரவீர

Mayoorikka
1 year ago
திரிகோணமடு வனப்பகுதியை அழிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை!  அமைச்சர் மஹிந்த அமரவீர

பொலன்னறுவை வெலிகந்த திரிகோணமடு வனப்பகுதியை அண்மித்துள்ள சூரியவெவ காப்புக்காட்டை யாராவது அழித்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறானதொன்று நடந்தால் உடனடியாக அழிவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம கேள்வி எழுப்பிய போதே மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜகத் சமரவிக்ரம :

“..பொலன்னறுவை வெலிகந்த திருகோணமடு வனப்பகுதியை அண்டியுள்ள சூரியவெவ காப்புக்காட்டை டோசர்களை பயன்படுத்தி திட்டமிட்ட குழுவொன்று அழித்து வருவதாக இன்று லங்காதீப பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. மனம்பிட்டிய ஊடகவியலாளர் நிமல் ஜயரத்ன இந்த தகவலை முன்வைத்துள்ளார். அதைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..”

விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சர் மஹிந்த அமரவீர:

“..அவரது கோரிக்கைக்கு கவனம் செலுத்துங்கள். அந்தக் காட்டை அழிக்கவே அனுமதிக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் உடனடியாக நிறுத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முறையான சாகுபடித் திட்டத்தைத் தவிர, சுற்றுச்சூழலை அழிக்க அனுமதிக்க முடியாது..”

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!