நுவரெலியாவில் மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகன் பொலிஸார் கைது

Kanimoli
3 years ago
 நுவரெலியாவில் மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகன் பொலிஸார் கைது

லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் வலப்பனை, கலங்கவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 59 வயதான டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண்ணே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் உலக உணவுத் திட்டத்தின் நிவாரண பொருட்கள் பகிந்தளிக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொள்ள மகள், மருமகன், மாமி ஆகிய மூவரும் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

அதன்போதே, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால், 27 வயதான மருமகன், மாமியாரை தாக்கியுள்ளார். சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவ்விடத்திலே​யே மாமி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதணைக்காக ரிகலகஸ்கட பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த தெரிப்பெய பொலிசார் மருமகனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4