அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.11.2022

மேஷம்
அசுவினி: உங்கள் முயற்சியில் தடைகள் உண்டாகும். செயல்களில் நிதானம் அவசியம்.
பரணி: பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடிகள் நீங்கும்.
கார்த்திகை 1: நீங்கள் எதிர்பார்த்தது தள்ளிப்போகும். சிந்தித்து செயல்படுவது நன்மையாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: ஒரு முயற்சியை ஒத்தி வைப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரோகிணி: நண்பர்களின் ஆதரவால் உங்கள் முயற்சி ஆதாயமாகும். மகிழ்ச்சி கூடும்.
மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வழக்கமான செயல்களில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: விஐபிகளின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: விரைந்து செயல்பட்டு ஒரு செயலை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
புனர்பூசம் 1, 2, 3: எதிர்ப்புகள் விலகும். உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்புண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள்.
பூசம்: நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
ஆயில்யம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும்.

சிம்மம்
மகம்: அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி தள்ளிப்போகும். செலவு அதிகரிக்கும்.
பூரம்: பணியிடத்தில் சக பணியாளர்கள் மறைமுகமாக தொல்லை அளிப்பர். எச்சரிக்கை அவசியம்.
உத்திரம் 1: வரவு அதிகரிக்கும் என்றாலும் வியாபாரத்தில் சில நெருக்கடி உண்டாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: சகோதரர்களால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
அஸ்தம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கடன்களால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.
சித்திரை 1, 2: பல நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: குடும்பத்தில் தோன்றிய சலசலப்பு நீங்கும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.
சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1, 2, 3: உறவினரின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். வழக்கில் வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: முயற்சியில் தடை உண்டாகும். உங்கள் நினைப்பிற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும்.
அனுஷம்: பணியாளர் சிலருக்கு பொறுப்புகள் கூடும். சக பணியாளர்களுடன் பிரச்னைகள் ஏற்படும்.
கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

தனுசு
மூலம்: வரவை விட செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள்.
பூராடம்: சக பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
உத்திராடம் 1: எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: புதிய நட்பின் வழியே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம்: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
சதயம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். நண்பர்களின் உதவி நன்மையை உண்டாக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பழைய பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.
ரேவதி: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உறவினர் இடையே உங்கள் செல்வாக்கு உயரும்.