எலோன் மஸ்க் மன்னிப்பு கேட்டார்! இடைநிறுத்தப்பட் சில கணக்குகள் மீள அனுமதி!!
அடுத்த வாரம் முதல் இடைநிறுத்தப்பட்ட சில டுவிட்டர் கணக்குகளுக்கு "பொது மன்னிப்பு" வழங்கப்படும் என்று லோன் மஸ்க் கூறுகிறார்.
நேற்று முன்தினம் அவர் டுவிட்டர் பயனர்களிடம் "சட்டத்தை மீறாத அல்லது மோசமான ஸ்பேமில் ஈடுபடாத" கணக்குகள் சமூக ஊடகத் தளத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை அடுத்து கொண்டுவரப்பட்டது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற பல கணக்குகள் ஏற்கனவே திரு மஸ்க்கால் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன.
உலகின் முதல்தர பணக்காரரான எலோன் மஸ்க் டுவிட்டரை 44பிலியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியது நீங்கள் அறிந்ததே.
திரு மஸ்க்கின் கருத்துக்கணிப்புக்கு 3.1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் "ஆம்" என்று வாக்களித்துள்ளனர்.
பொது மன்னிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது," "மக்களின் குரல் கடவுளின் குரல்" என்ற ஒரு லத்தீன் சொற்றொடரையும் திரு. எலான் மஸ்க் பயன்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது,