அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 26.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 26.11.2022

மேஷம்
அசுவினி: இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும்.
பரணி: கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
கார்த்திகை 1: அரசு வழியில் தடைபட்டிருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: புதிய முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பாராத பிரச்னைகளால் சங்கடங்கள் உண்டாகும்.
ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும். உங்கள் திறமைக்கு சவாலான நாள்.
மிருகசீரிடம் 1, 2: அலுவலகப் பணியில் திடீரென்று பிரச்னைகள் தோன்றும். பேச்சில் கவனம் தேவை.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். லாபத்திற்குரிய வழிகள் தோன்றும்.
புனர்பூசம் 1, 2, 3: எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்

கடகம்
புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம்: பணியிடத்தில் உங்கள் செயலுக்கு வரவேற்பு உண்டாகும். எதிர்பாராத லாபம் காண்பீர்கள்.
ஆயில்யம்: பெற்றோர் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்

சிம்மம்
மகம்: எதிர்பார்த்தவை நடந்தேறும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபமும் முன்னேற்றமும் ஏற்படும்.
பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
உத்திரம் 1: குடும்ப சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்

கன்னி
உத்திரம் 2, 3, 4: தாய்வழி உறவுகள் வழியே ஆதாயம் அடைவீர்கள். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் ஏற்படும்.
அஸ்தம்: வரன்தேடி வந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு.
சித்திரை 1, 2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும் என்றாலும், உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்
சித்திரை 3, 4: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்களின் முயற்சி ஒன்று நிறைவேறும்.
சுவாதி: வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். உங்கள் அறிவாற்றலால் நிதிநிலையில் உயர்வு உண்டாகும்.
விசாகம் 1, 2, 3: நண்பர்களின் உதவியால் அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும்.

விருச்சிகம்
விசாகம் 4: உங்களை விட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள்.
அனுஷம்: தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
கேட்டை: நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு குறித்த செய்தி வரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு
மூலம்: மனதில் குழப்பம் ஏற்படும். உங்கள் பிரச்னைகளை பிறரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.
பூராடம்: சிலர் உங்களை சீண்டிப் பார்க்க முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள்.
உத்திராடம் 1: வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கவனக்குறைவால் சங்கடங்கள் உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: திடீர் செலவுகள் தோன்றி இருப்பைக் கரைக்கும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.
திருவோணம்: செலவு கூடும். கடன் கொடுத்தவர்களால் சிலர் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
அவிட்டம் 1, 2: செயல்கள் இழுபறியாகும். அவசர வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பிறரது பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.
சதயம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். நண்பர்களின் உதவி உண்டு.
பூரட்டாதி 1, 2, 3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம்
பூரட்டாதி 4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
உத்திரட்டாதி: உங்களது நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறும். புதிய முயற்சி அனுகூலமாகும்.
ரேவதி: உறவினரின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.