20 அகவைக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண சென் பெற்றிக்ஸ் அணி வெற்றி

Prasu
1 year ago
20 அகவைக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண சென் பெற்றிக்ஸ் அணி வெற்றி

20 அகவைக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண சென் பெற்றிக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டியில் மன்னார் புனிய சவேரியார் அணியை தோற்கடித்து சென் பெற்றிக்ஸ் அணி, வெற்றியடைந்தது.

இந்த தகவலை இன்று நாடாளுமன்றில் வெளியிட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், குறித்த போட்டியில் இறுதிப்போட்டி வரையில் வெற்றி பெற்ற இரண்டு வடக்கு அணிகளும், அந்த இடத்துக்கு வரும் வரையில் பாரிய இடையூறுகளுக்கு முகங்கொடுத்ததாக தெரிவித்தார்.

ஆரம்ப நிலை போட்டிகளிலும் அரையிறுதிப் போட்டிகளிலும் இந்த இரண்டு அணிகளும் போட்டியிட்டபோது அவர்களின் உடல்களில் உள்ள சில அடையாளங்கள், தமக்கு போட்டிகளில் பங்கேற்க தடையாக இருப்பதாக எதிரணிகள் தெரிவித்திருந்தன.

இவ்வாறு பல மன ரீதியான அழுத்தங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இந்த இரண்டு வடமாகாண அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றமை குறித்து தாம் தமது பாராட்டை தெரிவிப்பதாக வினோநோகராதலிங்கம் குறிப்பிட்டார்.

இதேவேளை 20 அகவைக்கு உட்பட்ட காலபந்தாட்ட அணிகளை பொறுத்தவரையில், வடக்கில் உள்ள அணிகளே முன்னிலை வகிக்கின்றன.
எனினும் 20அகவைக்கு உட்பட்ட தேசியக் கால்பந்தாட்ட அணியில் இரண்டு வடக்கு வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.

உண்மையில், தேசிய அணியில் 2பேருக்கும் அதிகமான வடக்கு மாகாண வீரர்கள் இடம்பெறவேண்டும் என்று நோகராதலிங்கம் சுட்டிக்காட்டினார்.
எனவே விளையாட்;டுத்துறையில் இனரீதியான பாகுபாடுகள் வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இலங்கையின் கிரிக்கட் விளையாட்டிலும் தேசிய அணியில் முன்னர் முரளிதரன் உட்பட்ட சில தமிழ் வீரர்களும், முஸ்லிம் வீரர்களும் இடம்பெற்றிருந்தபோதும் தற்போது தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமில்லை.

இது சிறுபான்மையினர் மத்தியில் ஏமாற்றத்தை தரும் செயற்பாடாகவே உள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியைப் பார்க்கும்போது, அது இலங்கை அணியா? அல்லது சிங்கள தேசத்துக்கான அணியா? என்ற எண்ணம் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்படுகிறது.
வடக்கு கிழக்கில் திறமையான கிரிக்கட் வீரர்கள் உள்ளனர்.

எனவே இனரீதியாக பார்க்கப்படாது விளையாட்டுத்துறையானது, இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று வினோநோகராதலிங்கம் கேட்டுக்கொண்டார்.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!