உக்ரைன் போர்: குளிர்காலத்தில் ஆறு மில்லியன் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை
#War
#Ukraine
#Russia
Mugunthan Mugunthan
2 years ago

இந்த வாரம் உகரைன் நாட்டில் பாரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால், ஆறு மில்லியன் உக்ரேனிய குடும்பங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி கூறுகிறார்.
"இன்று மாலை நிலவரப்படி, பெரும்பாலான பகுதிகளிலும் கியேவிலும் இருட்டடிப்பு தொடர்கிறது" இவ்வாறு வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது இரவு உரையில் தெரிவித்ததுடன், புதன்கிழமை முதல் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
.ஆனால் குளிர்காலம் தொடங்கும் போது மில்லியன் கணக்கான மக்கள் ஒளி, தண்ணீர் அல்லது வெப்பம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதேவேளை நகரத்தில் வசிக்கும் பலர் "20 அல்லது 30 மணிநேரம்" மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.



