உன்னை எனக்காக தானம் செய்தாய்…
உழி முனையில் விண்ணை துணைக்காக அழைத்துத் தந்தாய்…
வெண்ணெயாய் உள்ளங்கையில் உருகி நின்றாய்
உலகையே இனிக்கச் செய்தாய்…
அழுக்கான அந்த ஆடைக்குள் அடுக்கி வைத்தாய் உன் அழகான பாசத்தை…
தோழில் நீ என்னை சுமக்கும்போது சோராத உன் முகம் என் கண்ணில் குப்பி விழக்காய் இப்பொழுதும் வெளிச்சம் காட்டும்.
நீரில்லாமல் மீனும் வாழாது
நீயில்லாமல் என் வாழ்வு இல்லை இவ்வுலகில் உலகில். ..
சிறை போட்டாய் உன் உள்ளத்துள் என்னை…
வெண் திரை போட்டு உன்னுள் என்னை அடை காத்து ஆயிரம் உலகை தந்தாய்…
சினம் பூசி முகம் காட்டாத தூய நிலவு நீ
உளம் போர்த்திக்
கனம் ஆயிரம் இருந் தும்
வனம் வீசும் அனல் காற்றும் உன் விழியில் எனக்காய் ஒரு பூங்காற்று வீசும் விந்தை என்ன?
உன் விந்தை வித்தை எல்லாம்
எனக்காக விண்ணைக்கூட பிழந் து விடை கொண்டு வருவாய் இவ்வுலகையும் தாண்டி.
அது உன்னால் மட்டுமே முடியும்.
அப்போ மடியும் என் சோகம். உன் முகம் பார்த்து விடியும் என் வாழ்வு.
அப்பா அப்பா அப்பா
அதுவே என் வாழ்வில் ஒப்பில்லாத ஒரே ஒரு சொந்தம்.