அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 27.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 27.11.2022

மேஷம்
அசுவினி: முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
பரணி: நிதி நிலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். நீங்கள் ஈடுபடும் செயலில் ஆதாயம் காண்பீர்கள்.
கார்த்திகை 1: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று வெற்றியாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: யோசித்து செயல்படவும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியாமல் போகும்.
ரோகிணி: உங்கள் முயற்சியில் இன்று பின்னடைவுகள் ஏற்படும். எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும்.
மிருகசீரிடம் 1, 2: செயல்களில் கவனம் தேவை. மற்றவரால் சில சங்கடங்களை நீங்கள் சந்திக்க நேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் ஒரு எண்ணம் நிறைவேறும்.
திருவாதிரை: நீங்கள் விரும்பும் வகையில் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். தம்பதி இடையே ஒற்றுமை உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த சங்கடங்களை சரி செய்வீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும்.

கடகம்
புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த ஒரு செயலில், இன்று உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.
பூசம்: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர்கள். மகிழ்ச்சி கூடும்.
ஆயில்யம்: உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.

சிம்மம்
மகம்: பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை நீங்கள் சாதிப்பீர்கள்.
உத்திரம் 1: பெற்றோரின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: உங்கள் மனம் காட்டும் வழியில் செல்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அஸ்தம்: புதிய சொத்து வாங்குவதற்குரிய நிலை உருவாகும். விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
சித்திரை 1, 2: நீண்டநாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்
சித்திரை 3, 4: எதிர்பாலினர் உதவியுடன் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி கூடும்.
சுவாதி: நெருக்கடிகள் இருந்தாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நிறைவேறும்.

விருச்சிகம்
விசாகம் 4: சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்.
அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை: புதிய வேலைக்காக நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தில் திருமணப்பேச்சு எழும்.

தனுசு
மூலம்: உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.
பூராடம்: செயலில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
உத்திராடம் 1: நெருக்கடிகளால் சங்கடப்படுவீர்கள். திட்டமிட்ட செயலில் ஈடுபட முடியாமல் போகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: எதிர்பாராத செலவால் சங்கடப்படுவீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
திருவோணம்: உங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். வெளியூர் பயணம் ஆதாயமாகும்.
அவிட்டம் 1, 2: செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் வெற்றியாகும். நிதி நிலை உயரும்.
சதயம்: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும்.
பூரட்டாதி 1, 2, 3: நண்பர்களின் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி ஒன்று வெற்றியாகும்.

மீனம்
பூரட்டாதி 4: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரேவதி: எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.