50,000 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டுபிடித்துள்ள ஐரோப்பிய ஆய்வாளர்கள்

Prasu
3 years ago
50,000 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டுபிடித்துள்ள ஐரோப்பிய ஆய்வாளர்கள்

ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் செர்பியாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டுபிடித்துள்ளனர். 

ஏரியின் கீழ் உறைந்த கிடந்த சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் இந்த புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ப ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜாம்பி வைரஸ்களை ஆய்வு செய்தனர். 

இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவையாகவே உள்ளன. இவை மனிதர்களைத் தாக்கும் ஆபத்து ரொம்பவே குறைவு என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

பனிப்பாறைகள் உருகும் போது இதுபோன்ற பழமையான வைரஸ்கள் வெளிப்பட்டாலும் வெளிப்புற சூழலில் எவ்வளவு காலம் தொற்றாக இருக்கும் என்பதும், தனக்கு பொருத்தமான ஒரு உயிர் மீது எப்படி இது தாக்கும் என்பது மதிப்பிடுவது சாத்தியம் இல்லாதது. 

இருந்தாலும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணிகளால் தொடர்ந்து பனிப்பாறைகள் உருகும் நிலையிலும் ஆர்க்டிக் பகுதியில் அதிக மக்கள் குடியேறுவதும் ஆபத்த்துக்கு வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4