இன்றைய வேத வசனம் 02.12.2022: நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்இ கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 02.12.2022: நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்இ கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்

அண்டை நிலத்துக்காரருக்கும் இந்த  விஜயனுக்கும் நிலத்திலுள்ள வழி பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது.

இது மூன்றாவது மனிதனின் பார்வையில் 1000 ரூபாயில் தீர்க்கவேண்டிய பிரச்சனைதான்.
ஆனால் இவர்களுக்கோ இது பெருமை பிரச்சனையாக இருந்தபடியினால் இது கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்க ஆரம்பித்தது.

பேச்சில் ஆரம்பித்து, கைகலப்பில் முடிந்து, அது அவர்களை காவல்துறைக்கு அழைத்து சென்றது.
அங்கும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் நானா? நீனா? என்ற பெருமை கோர்ட் வாசல் வரைக்கும் போனது.

1000 ரூபாயில் தீர்க்க வேண்டிய பிரச்சனை பல்லாயிரக்கணக்கை தாண்டி ஓடியது. அதுமட்டுமா! கோர்ட் வாசல் நடந்து நடந்து செருப்பும் தேய்ந்து போன கதைதான் இது. 

ஒரே நாளில் தீர்க்க வேண்டிய பிரச்சனை வருடங்கள் தாண்டியும் தீராத கதையாய் மாறியது.
சொந்த வீட்டை இழந்து, சமாதானத்தை இழந்து தவித்த அந்த விஜயன் மனக்குழப்பத்துடன் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தார்.

இருக்கையில் அமர்ந்து வெளியில் பார்த்துக்கொண்டிருந்த அவரின் கண்களில் சுவற்றில் எழுதப்பட்டிருந்த அந்த வார்த்தை பட்டு, அவர் உள்ளத்தை தொட்டு உணர்த்தியது.
“சரிர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது”

பேருந்தில் அன்னார் பயணம் செய்தபடியினால் முழுவதும் சரியாக படித்துமுடிக்காத அந்த வார்த்தை பைபிளில் எழுத பட்ட வார்த்தை தான் என்று கண்டு கொண்டார்.

ஆனாலும் பேருந்தில் சென்ற எஞ்சிய நேரங்களிலெல்லாம் அந்த வார்த்தை அவருக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது. 

சரிரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது என்றால் எந்த முயற்சி பிரயோஜனமுள்ளது? எப்படி இந்த நிலத்தில் உள்ள வழி பிரச்சனையிலிருந்து வெளியில் வருவது? என்றெல்லாம் யோசிக்கலாயினார்.
வீட்டில் சென்றதும் பைபிளை துளாவி அந்த சுவற்றில் வரையப்பட்ட அந்தத் தங்க வார்த்தைகளை கண்டு பிடித்தார்.

சரிரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. (#I_தீமோத்தேயு 4:8)
இதுவரையும் புரியாத விஜயன் அதன் அர்த்தம் அறிந்தவராய் தலையை தொங்கப் போட்டு தரையை பார்த்துக்கொண்டிருந்தார். 

அவருடைய கண்கள் கலங்கியிருந்தது. இந்த வார்த்தை முற்றிலும் உண்மை. இத்தனை நாட்களும் சரிர முயற்சியை மேற்கொண்டு எல்லாம் இழந்துவிட்டேன் என்ற உணர்வுக்குள் வந்தார்.

அந்த உணர்வுகள் தேவனை தேட அவருக்கு உந்துகோலாக அமைந்தது. அன்றுதான் வாழ்நாளில் இயேசுவிடம் சின்ன ஒரு விண்ணப்பத்தை வைத்தார்.

இதுவரையும் உம்மை தேடாமல் என்னால் முடியும் என்ற பெருமையால் சொந்த முயற்சியில் களத்தில் இறங்கி தோல்வி எனும் தலைப்பாகையை அணிந்து கண் கலங்கி நிற்கின்றேன்.

என் கண்ணீரை துடையும் ஆண்டவரே! இன்றுமுதல் நான் உம்மையே நம்புகிறேன் எனக்குள் இருக்கும் பெருமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னையே அர்ப்பணித்தான்.

காலையில் எழுந்த உடனே அண்டை நிலத்தாரிடம் சென்று ஒப்புரவாகி விட்டான் விஜயன்.
அன்று முதல் தேவன் அவன் கண்ணீரை துடைத்து அவனுக்கு எல்லாவற்றையும் பிரயோஜனமாக்கி கொடுத்தார்.

நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். (#சங்கீதம் 118:5)

எனக்கு அருமையானவர்களே! நான் யார்? நான் எப்படிப்பட்டவன்? என் படிப்பு என்ன? என் குலம் என்ன? இப்படிப்பட்ட காரியங்கள் இருக்குமானால் நீங்கள் பெருமையோடு ஐக்கியப்பட்டவர்கள் என்பதை உறுதியாக்குகிறது.

தேவன் பெருமைக்கு எதிர்த்து நிற்கிறார்என்பதை நாம் மறக்கவேண்டாம். இன்றும் அநேக குடும்பங்கள் பெருமையினால் தெருவுக்கு வந்துள்ளது என்பதையும் நாம் நினைத்துப்பார்த்து நம்மிடத்தில் இப்படிப்பட்ட காரியங்கள் இருக்குமானால் இந்த புதிய மாதத்தில் தேவனை சார்ந்து இருந்து தாழ்மையை அணிவோம்.
தேவன் தாமே உங்களை அவ் வண்ணமாக நடத்துவாராக!

ஆமென்! அல்லேலுயா!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!