இலங்கை கிரிக்கட் அணியில் மேலும் ஒரு சர்ச்சை சுமிக்க கருணாரட்ன விசாரணைக்கு உட்படவுள்ளார்
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர், சாமிக கருணாரட்னவுக்கு எதிராக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது குறித்த வீரரின் நடத்தை குறித்து,விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் எழுதப்பட்ட கடிதம் பகிரங்கமாக கசிந்ததையடுத்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
கருணாரத்னவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால், ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட தடை மற்றும் 5000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் ஏன் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை விளக்குமாறும் அமைச்சர் கோரியிருந்தார்.
இதனையடுத்து தலைமைத் தேர்வாளர் பிரமோத்ய விக்ரமசிங்க, அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த புதன்கிழமை முடிவடைந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் வீரரை புறக்கணித்தமைக்கு, கருணாரத்ன பல கவனக்குறைவுகளுக்கு மையமாக இருந்ததாக கூறப்பட்டிருந்தது.
சாமிக்க பயிற்சியாளருடன் உண்மையாக நடந்துக்கொள்ளவில்லை. அத்துடன் அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை என்றும் விக்ரமசிங்க எழுதினார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தின் போது கூட நான் சமிகாவை மிகவும் உன்னிப்பாக அவதானித்தேன், நாங்கள் எங்கெல்லாம் உள்நாட்டில் பயணித்தாலும், அவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்களைச் சந்திப்பதில் அதிக கவனம் செலுத்தினார் மேலும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் குறிப்பிட்டு, சுற்றுப்பயணத்தில் சில பயிற்சி அமர்வுகளைத் தவறவிட்டார் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன், இருப்பினும் அவர் ஹோட்டலில் பெண் தோழர்களுக்கு தங்கியிருந்தார் என்று நான் நம்புவதற்கு காரணம் இருக்கிறது. (அவர் பயிற்சி அமர்வுகளில் கலந்து கொள்ளாத திகதிகளில் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு ஹோட்டலுக்கு கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்).
அவரது கவனம் துடுப்பாட்டத்தில் இல்லை என்பதும், அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு அவரால் செயல்பட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு எனது சக தேர்வாளர்களுடன் ஒரு மாநாட்டு அழைப்பை மேற்கொண்டேன். அவர் தனது கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதையும், தன்னை மாற்றிக் கொள்வதையும் உறுதிசெய்வதற்காக ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து அவரை கைவிடுவது என்று நாங்கள் முடிவு செய்தோம்' என்று தலைமை தேர்வாளர் விக்ரமசிங்க தனது கடிதத்தில் எழுதினார்.
'நாங்கள் சிட்னியில் தங்கியிருந்த காலத்தில், இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆண், சாமிகவைச் சந்திக்க விரும்புவதாகவும், சாமிகவுடன் தனக்கு ஒரு பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரைச் சந்திக்க விரும்பினார் என்றும் அணியின் மேலாளர் என்னிடம் கூறினார்.
அதன்பிறகு அவரது கோரிக்கையை மேலாளர் ஏற்க மறுத்துவிட்டார். அவரைச் சந்திப்பதற்கு ஒரு அர்த்தமுள்ள காரணம் இருந்தது, அந்த நேரத்தில் சாமிக, தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து அநாகரீகமான முறையில்; தொல்லை கொடுத்து வந்ததாக அந்த இலங்கையர் குறிப்பிட்டிருந்தார்.
குழு மேலாளர் மூலம் இந்த இலங்கையரை தொடர்பு கொண்டால், நீங்கள் இன்னும் ஆழத்தை அறியலாம். சாமிக்கை சம்பந்தப்பட்ட சில பாரதூரமான முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்த சாமிகவின் செயற்பாடுகள் குறித்து, தேர்வாளர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்,
இந்தநிலையில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பரிசீலிக்கப்படுவதற்கு முன், அந்த வீரரை உளவியல் ஆலோசனைக்கு உட்படுத்துமாறு தலைமை தேர்வாளர் பரிந்துரைத்தார்.
இந்த கடிதம் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் செயலாளர் மொஹான் டி சில்வாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.