உலகில் வாழ்வதற்கான செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் கொழும்பு
Mayoorikka
2 years ago

உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.
லண்டனைச் சேர்ந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
அந்த அமைப்பின் இந்தாண்டுக்கான உலகின் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த முதல் பத்து நகரங்களில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.
தரவரிசையில் 161 வது இடத்தில் கொழும்பு இந்தியாவின் பெங்களூருவுடன் இணைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் சென்னை மற்றும் அஹமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு மேலே தரவரிசையில் உள்ளது.
உலகளாவிய டமஸ்கஸ், திரிபோலி மற்றும் தெஹ்ரான் ஆகியவை மிகவும் செலவு குறைவான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது அந்த நாடுகளின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை பிரதிபலிக்கிறது.



