தாயை இழந்த ரஸ்ய குழந்தை, பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்

Kanimoli
3 years ago
தாயை இழந்த ரஸ்ய குழந்தை, பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்

காலி உனவடுன பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் தமது தாயை இழந்த ரஸ்ய குழந்தை, பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி உனவதுன பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின் மீது தொடரூந்து மோதியபோது, ரஸ்யப் பெண்ணும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்;.
முன்னதாக ரஸ்யப் பெண், பணியின் நிமித்தம்;, 4 அகவையைக்கொண்ட தமது குழந்தையை, பராமரிப்பு இல்லம்  ஒன்றில் தங்கவைத்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
பெலியத்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின தொடரூந்தே முச்சக்கரவண்டியின் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஸ்ய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டநிலையி;ல், ரஸ்யாவில் இருந்து குழந்தையின்; தந்தை இலங்கைக்கு வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அல்லது நாளை மறுதினம் அவர் இலங்கை வரவுள்ளார் என்று ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4