அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

Nila
1 year ago
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போது ரிக்கி பொண்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியின் தொலைக்காட்சி வர்ணனையில் ரிக்கி பொண்டிங் ஈடுபட்டிருந்த நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பெர்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இருப்பினும், பெர்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொண்டிங், தனக்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றதாக சக ஊழியர்களிடம் கூறியதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், பொண்டிங்கின் உடல்நிலை குறித்து சனல் 7 செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ரிக்கி பொண்டிங் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், இன்றைய எஞ்சிய நேரத்தில் அவர் வர்ணனையில் ஈடுபட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!